அன்னை பராசக்தியின் அழகு வெள்ளத்தை 'ஸௌந்தர்யலஹரி' என்று ஆதி சங்கரர் பாடினார். 'லஹரி' என்றால் வெள்ளம்.
இதுவோ "கந்த லஹரி".
கந்தக் கடவுளின் அன்பும், ஆற்றலும், அருளும், பெருமையும் வெள்ளமென இந்நாள் கவிஞரான திரு, சுரேஷின் கவிதைகளில் பாய்கிறது.
முருகன் என்றாலே அழகன். எனவே இதுவும் அழகு வெள்ளமே..
கந்த லஹரி - கந்தன் எனும் மந்திரத்தை கவினுரு தமிழால் புனைந்து நக்கீரர் தமிழ்க் கடவுளின் மகிமையை "ஆற்றுப் படுத்தி" (வழிப்படுத்தி) ஆறு பகுதிகளாக "திருமுருகாற்றுப் படை ஈந்தது போல், கச்சியப்ப சிவாசார்யர் இயற்றிக் குமர கோட்டத்தில் அரங்கேற்றிய கந்த புராணம் எனும் கந்தன் சரிதையை கவிஞர் மாத்திரை (capsule) வடிவத்தில் அளித்துள்ளார்.
...